ஞானசார தேரரால் கடத்தப்பட்டேன் அரம்பேபொல ரதனசார குற்றசாட்டு

எங்கள் சக்தி மக்கள் கட்சியில் தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பாக ஏற்பட்டுள்ள தகராறை மையமாகக் கொண்டு தன்னை கடத்தியதாக அரம்பேபொல ரதனசார தேரர் தெரிவித்துள்ளார்.

“பொதுச் செயலாளர் கல கொட அத்தே ஞானசார தேரர் மற்றும் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆகியோரால் நான் கடத்தப்பட்டேன்” என அரம்பேபொல ரதனசார தேரர் தெரிவித்துள்ளார்.

தன்னை கடத்தி சென்று அவர்கள் துப்பாக்கியால் தாக்கினார்கள் அதனால் தனக்குக் காயம் ஏற்பட்டதாக ஊடகங்களுக்கு அரம்பேபொல ரதனசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பல இடங்களில் தடுத்து வைப்பதற்காக, கட்சி செயலாளர்கள் குறித்து விசாரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள உள்ள சுவிஸ் தூதரகத்திற்கு இது குறித்து கடிதம் ஒன்றை வழங்கச் சென்ற போது அவர் இதனைத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir