காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

வடகிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

உள்நாட்டுப் போரின் போதும், போரின் இறுதிக் காலப்பகுதியிலும் வடகிழக்கில் ஏராளமான இளைஞர் யுவதிகள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். அதேவேளை, இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்ததென்று இன்று வரை தெரியவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் பல வருடங்களை தாண்டியும் நடைபெற்று வருவதனால், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்.மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

You May Also Like

About the Author: kalaikkathir