13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தேவையற்ற குழப்பம் ; டக்ளஸ் தேவானந்தா

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தேவையற்ற குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாகக் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித் தார்.

புதிய அரசாங்கத்திற்கு இதுவரை அவ்வாறான நோக்கங்கள் எதுவும் கிடையாது எனவும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை யாரும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை நடைபெற்ற நிலை யில், கடந்த ஆட்சியாளர்களினால் உருவாக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளைக் நீக்கும் வகையில் 20 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச் சரவை அங்கீகா ரம் வழங்கியுள்ளது.

அண்மைய நாட்களாக 19 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற் படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகிய நிலை யில், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் இந்தியாவின் தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட 13 ஆம் திருத் தச் சட்டத்தினையும் இல்லாமல் செய்வதற்கு புதிய அரசாங்கம் முயற்சி களை மேற்கொண்டு வருவதாக சில தரப்புக்களினால் கருத்துக்கள் வெளியிடப் பட்டு வருகின்ற நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந் தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தினை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் நலன்களை அடைந்து கொள்ள முயற்சிக்கும் குறுகிய நலன் கொண்ட அரசியல் தரப்புக்களே இவ்வாறான உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரவ விடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir