இலங்கை ராப் பாடகர் வாகீசன், பிக்பாஸ் புகழ் ஜனனி இணையும் திரைப்படம்!

இலங்கையைச் சேர்ந்த ராப் பாடகர் வாகீசன், வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘மைனர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகின்றார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

Arabi production & Viyan ventures மற்றும் MayDay Productions சார்பில் இணைந்து தயாரிக்க, ஃபைண்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “மைனர்”.

இப்படத்தின் பூஜை நேற்று (30) சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய இளைய தலைமுறையின் காதல் எப்படி இருக்கிறது என்பது தான் இப்படத்தின் மையம். பள்ளி பருவத்தில் பிரிந்த காதலைத் தேடி ஒரு இளைஞன் பயணமாகிறான். அந்த காதல் மீண்டும் சேர்ந்ததா? இருவரும் இணைந்தார்களா என்பது தான் இப்படத்தின் கதை.

இப்படத்தில் இலங்கை ராப் பாடகர் வாகீசன் நாயகனாக நடிக்க, பிக்பாஸ் புகழ் ஜனனி நாயகியாக நடிக்கிறார். சார்லி, செண்ட்ராயன், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. விரைவில் சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடாத்துவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply