முச்சக்கரவண்டிகளை விற்பனை செய்யும் உரிமையாளர்கள்!

இலங்கையில் நாளாந்தம் 600 முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தங்கள் முச்சக்கர வண்டிகளை விற்பனை செய்வதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் 219506 உரிமையாளர்கள் தங்கள் முச்சக்கர வண்டிகளை விற்பனை செய்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் புதிததாக முச்சக்கர வண்டி பதிவில் வீழ்ச்சி நிலை காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வருடத்தில் புதிதாக 14378 முச்சக்கர வண்டிகள் மாத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய நாள் ஒன்றுக்கு புதிதாக 40 முச்சக்கர வண்டிகள் வீதிகளில் இறங்குவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir