2020 வாக்காளர் பெயர் பட்டியலை திருத்தும் பணிகள் ஆரம்பம்

இலங்கையில் 2020 வாக்காளர் பெயர் பட்டியலை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தற்போது கிராம உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி வாக்காளர் பெயர் பட்டியல் பதிவு தொடர்பில் கிராம உத்தியோகத்தரின் ஊடாக வாக்காளர்களின் விபரம் பெறப்படவுள்ளது.

2019 வாக்காளர் பெயர் பட்டியலுக்கமைய நாட்டில் ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir