ஒட்டுசுட்டானில் கிணற்றில் விழுந்த யானைக்குட்டி மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணி அளவில் காட்டு யானை ஒன்று அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறொன்றிற்குள் விழுந்துள்ளது.

கிணற்றிலிருந்து வெளியேற முடியாமல் யானை தத்தளித்தனை அவதானித்த கிராம மக்கள் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் குறித்த யானையை மீட்டு வனப்பகுதிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நீண்ட போராட்டத்தின் பின்னர் யானை கிணற்றில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir