ஜனாதிபதி ஆணைக்குழுவில் அடுத்த மாதம் முன்னிலையாகுமாறு ராஜிதவுக்கு அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனா ரத்ன மற்றும் ஹேஷா வித்தானகே ஆகியோரை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி குறித்த ஆணைக்குழுவில் முன்னி லையாகுமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுங்க பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ. விஜேவீர முன்வைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir