ஐ.தே.க. செயற்குழு இன்று கூடுகின்றது

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் கூடவுள்ளது.

கட்சிக் கட்டமைப்பில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்படவிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவாசம் தெரிவித்தார்.

கட்சியின் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்கத் தயாராகவிருப்பதாக கரு ஜயசூரிய கட்சித் தலைமைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் முக்கியமாக ஆராயப்படவிருக்கின்றது. இது தொடர்பில் செயற்குழு தமது நிலைப்பாட்டை இன்று வெளியிடும் என் எதிர்பார்க்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir