விக்கியின் உரை ; மனுச நாணயக்கார வெளியிட்ட கரிசனை சபாநாயகர் நிராகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார வெளியிட்ட கரிசனைகளை சபாநாயகர் நிராகரித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றம் கூடியவேளை விக்னேஸ்வரனின் கருத்துக்களுக்கு பதிலளிக்கவேண்டும் என கோரிய மனுசநாணயக்கார பிளவுபட்ட இலங்கையை விக்னேஸ்வரன் ஊக்குவிக்கின்றார் என தெரிவித்தார்.

எனினும் இதனை நிராகரித்த சபாநாயகர் விக்னேஸ்வரனின் உரை குறித்து ஆராயப்படும் என தெரிவித்தார்.
எனினும் சபாநாயகரின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்த நாணயக்கார விக்னேஸ்வரனின் நிலைப்பாட்டிற்கு தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

இதேவேளை இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப்ஹக்கீம் கருத்துசுதந்திரத்தினை நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் மதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அவர் சபாநாயகரின் நிலைப்பாட்டை வரவேற்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir