சேவைகளின் ஊடாகவே மக்களுக்கு நன்றி தெரிவிப்பேன் ; அங்கஜன்

சேவைகளின் ஊடாகவே மக்களுக்கு நன்றி தெரிவிப்பேன் என யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்த கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்ட மக்களுக்கு நன்றியைத் தெரிவித்த அவர், தொடரும் காலங்களில் அவர்களுக்கு தனது சேவைகளின் ஊடாகவே நன்றிகளைத் தெரிவிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் விவசாயம் மற்றும் கடற்தொழில் உள்ளிட்ட துறைகளின் அபிவிருத்தி விடயங்களில் அதிக கவனம் செலுத்தி மக்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்

You May Also Like

About the Author: kalaikkathir