இலங்கையர் என்ற வகையில் அனைவரையும் ஒன்றி ணைத்த நாடொன்றை உருவாக்க வேண்டும். அதற்காக நான் ஆரம்பம் முதல் குரல்கொடுத்து வருகிறேன். இன வாதத்தைப் புறக்கணித்து தேசியத்துவத்தை போசிக்க வேண்டும். அது தொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவை யில்லை என நீதி அமைச்சர் அலி சப்றி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தார்.
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக அரசி யலமைப்பின் 9 ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குச் சவால் விடவோ எதிர்க்கவோ அவசியமில்லை. சகலருக்கும் தாம் விரும்பிய மதத்தைப் பின்பற்று வதற் குள்ள உரிமையும் யாப்பில் கூறப்பட்டுள்ளது.
இனம், மதம், குலம் பேதம் பார்த்து எவரையும் தாழ்வா கவோ உயர்வாகவோ கருதக் கூடாது எனவும் அரசிய லமைப்பு கூறுகிறது என நீதி அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் சகல இனத்தவருக்கும் எந்த மதத்தையும் பின்பற்றும் சுதந்திரம் இருக்கின்றது. சகலரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.
அதனால் நாட்டுக்கு எது உகந்தது என சிந்தித்து தலைவர் கள் செயற்பட வேண்டும். சரியான பாதையைப் பார்த்து நாட்டுக்கு தலைமை வழங்க வேண்டும். அதன் மூலமே சகல மக்களும் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வாழும் நிலை ஏற்படும்.
எமக்கிடையில் விரிசல் தேவையில்லை. நாங்கள் அனை வரும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்பக் கைகோர் த்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன், பாராளுமன்றம் தெரிவான சகல அமைச்சர் களும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதாகவும் நாட்டை துண்டாட ஆதரவு வழங்குவதில்லை எனவும் உறுதியளிக் கின்றனர். இதனைப் பேச்சுக்கு மாத்திரம் மட்டுப்படுத் தாது செயலிலும் காட்டவேண்டும் என அவர் மேலும் தெரி வித்தார்.
