இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா ;இந்தியாவைப்போல் ஆகுமா?

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 73அக அதிகரித்துள்ளது.

தற்போது, அடையாளம் காணப்பட்ட இருவரில் ஒருவர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்தும் மற்றையவர் இந்தியாவில் இருந்தும் நாடு திரும்பியவர்கள் எள அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.து.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து மேலும் 11 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக இரண்டாயிரத்து 879பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட 182 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 12 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir