எதிர்வரும் 17ஆம் திகதி முதல் டிஜிட்டல் மயப்படும் கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது. கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளதாக, ஆணைக்குழு தெரிவித்தது.

அத்துடன், கொரோனா தாக்கம் காரணமாக பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் 52 நாட்கள் முடங்கியிருந்ததாகவும், பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக, கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்துவதன் மூலம், பங்குச் சந்தை நடவடிக்கைகளை புதிய உத்வேகத்துடன் முன்னெடுக்க முடியும் எனவும், ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir