20ம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி!!

20 ஆம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

19ம் திருத்தச் சட்டத்தை நீக்கி 20ம் திருத்தச்சட்டத்தை கொண்டு வர ஏற்கனவே அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.

இதன்படி நீதியமைச்சினால் தயாரிக்கப்பட்ட 20ம் திருத்தச் சட்டமூலத்தின் வரைவு சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் அதனை நாடாளுமன்றத்தின் விஷேட பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முடியும் என சட்டமா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது..

இந்தநிலையில் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட இந்த வரைவிற்கு அனுமதி வழங்கப்பட்டதுடன் அதனை வர்த்தமானியில் அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir