23,000 ஹெக்டேயர் காட்டுப் பகுதியை சிங்கராஜ வனத்துடன் இணைப்பதற்கு தீர்மானம்!

சிங்கராஜ வனத்தை சுற்றியுள்ள 23,000 ஹெக்டேயர் காட்டுப் பகுதியை சிங்கராஜ வனத்துடன் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.A.C. வேரகொட இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சிங்கராஜ வன அமைப்பாக இதனை நிர்வகிக்க தீர்மானித்துள்ளதுடன், இதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கராஜ வனத்தின் எல்லைப் பகுதியை வரையறுக்கும் நடவடிக்கையும் முடிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த மாதத்திற்குள் வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir