வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் (Kim Jong un) ஆட்சியின் கீழ் அந்நாட்டு மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை அங்கிருந்து வெளியேறி வெளிநாட்டில் வசிக்கும் யியோன்மி பார்க் (Yeonmi Park) என்ற இளம்பெண்ணொருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
வடகொரியாவில் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் பெருவாரியான மக்கள் சத்தான உணவுக்காக பூச்சிகளையே சாப்பிட்டு வருவதாக கூறும் பார்க், வடகொரியாவிலிருந்து தமது 13ஆவது வயதில் வெளியேறும் வரை தாமும் பூச்சிகளை உட்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுவாக சேரிப்பகுதிகள் போன்றே வடகொரிய தெருக்கள் காணப்படுவதாக கூறும் பார்க், தெருக்களில் கேட்பாரற்று சடலங்கள் கிடப்பதையும் தாம் அச் சிறு வயதில் காண நேர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சாரம் கூட வடகொரியாவில் பொதுவல்லவென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,