சங்குப்பிட்டி வீதியில் டிப்பர் ரக வாகனத்துடன் விபத்து பெண் ஒருவர் பலி

தனங்கிளப்பு சந்தியில் இருந்து சங்குப்பிட்டி வீதியில் டிப்பர் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

சாவகச்சேரியில் இருந்து பூநகரி பிரதேசத்திற்கு பயணித்த மோட்டார் சைக்கிளும் எதிர்த் திசையில் வந்த டிப்பருமே நேருக்கு நேருக்கு மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் உயிரிழந்த பெண் ஒரு காலையிழந்த நிலையில் செயற்கை கால் பொறுத்தபட்டிருந்ததுடன் அவரின் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

You May Also Like

About the Author: kalaikkathir