இலங்கை கொரோனா தொற்றாளர்கள் முழு விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3122 ஆக காணப்படுகிறது. அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 7 பேர் குணமடைந்து நேற்றைய தினம் தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து தொள்ளாயிரத்து 25 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் தொற்றுக்குள்ளான 185 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும், 57 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக காணப்படுகின்றது.

மேலும் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சத்து 39 ஆயிரத்து தொள்ளாயிரத்து 7 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir