பதுளையில் குளத்திலிருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு!

பதுளை, தெமோதரை சௌதம் தோட்டம் மேற்பிரிவில் அமைந்துள்ள குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெமோதரை, சௌதம் தோட்டம் மேற்பிரிவில் 5ஆம் கட்டையில் அமைந்துள்ள குளத்தில் ஆணின் சடலம் குளத்தில் மிதப்பதை ஞாயிற்றுக்கிழமை கண்ட பிரதேச மக்கள், எல்ல பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து சடலம் அங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர், சௌதம் மேற்பிரிவைச் சேர்ந்த 74 வயதுடைய பெரியம்மன் பெரியான் என எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir