உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று வவுணதீவு பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பாவக்கொடிச்சேனை பிரதேசத்தில் வீடு ஒன்றை பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் வீட்டில் சட்டவிரோதமான முறையில் மறைத்து வைத்திருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டதுடன் 30 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

You May Also Like

About the Author: kalaikkathir