கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டாரில் இருந்த வந்த ஒருவருக்கும் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 8 கைதிகளுக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளனானவர்களின் எண்ணிக்கை 3140 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 09 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2935 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில் 193 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir