மட்டக்களப்பில் வாளுடன் கைதான இளைஞர்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் வாள் ஒன்றுடன் இளைஞர் ஒருவரை வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமைய பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் சம்பவதினமான இரவு 7 மணியளவில் மோட்டர் சைக்கிளில் ஒன்றில் இளைஞர் ஒருவர் வாளுடன் வீதியில் சுற்றித்திரிந்து பொது மக்களை பயமுறுத்தி வருவதாக பொலிசாரின் அவசர இலக்கம் 119 இலக்கத்துக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர் .

இதனையடுத்து பொலிசார் இளைஞரை சுற்றிவளைத்து வாளுடன் கைது செய்தனர் இதில் கைது செய்யப்பட்டவர் கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் எனவும் இவர் பல்வேறு குற்றச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிசாரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனவும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir