தியாகி திலீபன், நோய் காரணமாகவே உயிரிழந்தார் ; பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான திலீபன், நோய் காரணமாகவே உயிரிழந்தார் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

பூசா சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டள்ள சிறைக்கைதிகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கமால் குணரட்ன மேலும் கூறியுள்ளதாவது, “தீலிபன் உண்ணாவிரதத்தினால் மரணமடையவில்லை. அவர் நோயின் காரணமாகவே மரணமடைந்தார்.

மேலும், அவர் நோயாளி என தெரிந்தே பிரபாகரன் அவர் உண்ணாவிரதமிருப்பதற்கு அனுமதித்தார்.

உண்ணாவிரதமிருப்பவர்கள் ஓரிருநாட்களில் அதனை கைவிட்டுவிடுவார்கள் அது குறித்து சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir