20ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஆராய்வதற்கு புதிய குழு நியமனம்

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குழுவொன்றை நியமித்துள்ளார்.

நாடாளுமன்ற பிரதிநிதிகளே குறித்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளடங்கின்றனர். குழுவின் தலைவராக அமைச்சரவை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

அந்தவகையில் குறித்த குழுவில், அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பில, அமைச்சர் மொஹமட் அலி சப்ரி, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ.தொலவத்த ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் தாக்கத்தை காட்டிலும் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டி வருகின்றது. அதாவது நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இந்த திருத்தத்தை கொண்டுவருவது சிறந்தது என அரசாங்க தரப்பினால் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

ஆனால், அரசாங்கத்துக்கு எதிரான கட்சிகள் மற்றும் ஏனைய சிறுபான்மைக்கட்சிகள், குறித்த 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் சர்வதிகாரப்போக்குக்கு வழிவகுக்கும், சிறுபான்மையினரின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையுமென அதனை எதிர்த்து வருகின்றன.

இந்நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஆராய்வதற்கு குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir