உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்

உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இதன் கீழ் பெரும்போகத்தில் நெற் செய்கையாளர்கள் ஒன்பது இலட்சம் பேருக்கும் வேறு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் 12 இலட்சம் பேருக்கும் உர மானியம் வழங்கப்படவிருப்பதாக உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில தெரிவித்தார்

நெற் செய்கைக்குத் தேவையான உரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. மரக்கறி மற்றும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான உரம் விநியோகிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக உர மாநியத்திற்காக அரசாங்கம் ஏழாயிரம் கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது என்று உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir