சட்டவிரோத துப்பாக்கிகளுடன் வவுனியாவில் இருவர் கைது

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளநாட்டில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாகிகளுமே இவ்வாறு சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர்.

வவுனியா சின்னபன்டி விரிச்சான் பகுதியில் வைத்து31 வயதுடைய ஒருவரும் உடவலை பகுதியில் வைத்து 48 வயதான இன்னொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு , அவர்களை மன்னார் மற்றும் வெல்லவாய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

You May Also Like

About the Author: kalaikkathir