அரசாங்கத்தில் இணைய 20 பேர் தயார்

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் 17 பேர் அரசாங்கத்தில் இணைய தயாராகி வருவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை 20 ஆக அதிகரிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

20 வது திருத்தத்தை சபையில் முன்வைத்த பின்னர் பாராளுமன்றத்தில் இன்று அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆளும் கட்சியில் சேரத் தயாராகும் உறுப் பினர்கள் ஏற்கெனவே பிரதமர் மற்றும் பிற அமைச்சர் களுக்கு தொலைப்பேசி அழைப்பு விடுத்து சலுகை களைக் கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir