மலையகத்துக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் கலந்துரையாடல்

மலையகத்துக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிற்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கல்வி அமைச்சில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பிரதமரின் இணைப்புச் செயலாளரும், இ.தொ.காவின் உப தலைவருமான செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir