இந்தியாவின் ஜோத்பூர் நகரில் இந்து தேசியவாதிகளால் 11 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரி தலைநகரின் சிவப்பு வலயத்தில் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவேண்டும் என செவ்வாயன்று பாகிஸ்தானின் ஆளும் பிரிஐ கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ரமேஷ் குமார் வன்வானி கோரிக்கை விடுத்தார்.
இந்து சமூகத்தின் உறுப்பினர்களின் தலைமையிலான குழுவினர் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்காக நாடு முழுவதிலுமிருந்து பேரணியாக இஸ்லாமாபாத்தை வியாழக்கிழமை (இன்று) வந்தடைவர் என ஊடக சந்திப்பொன்றின்போது பாகிஸ்தான் இந்து பேரவையின் தலைமை போஷகரான தேசிய பட்டியல் உறுப்பினர் தெரிவித்தார்.
கொல்லப்பட்டவர்கள் தர்பார்க்காரிலுள்ள பீல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார். இந்திய உயர்ஸ்தானிகாராலத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்த பாகிஸ்தான் இந்து பேரவை தீர்மானித்துள்ளது.
ஆர்ப்பாட்டப் பேரணி தர்பார்க்காரில் ஆரம்பித்து மிர்புர்க்காஸ், தட்டா, ஹைதராபாத், நவாப்ஷா ஆகியவற்றினூடான இஸ்லாமாபாத்தை சென்றடையும். கராச்சியில் ஆர்பிக்கும் மற்றொரு ஆர்ப்பாட்டப் பேரணியினர் லர்கானா, காஷ்மோர் ஆகிய பகுதியிலிருந்து செல்வோருடன் இணைவர்.