வெறுப்பு நிறைந்த பாடப் புத்தகங்களைத் துடைப்பதிலிருந்து தடைசெய்யும் மத பிரசங்கம்வரை மற்றொரு இயல்புநிலைக்கான முயற்சியில் இறங்கியுள்ள சவூதி அரேபியா, இஸ்ரேலுடன் நல்லுறவை ஏற்படுத்த மறுத்துள்ளது. அதேவேளை, யூதர்களுடனான சகவாழ்வை நாடிச் செல்கின்றது என ஏ,எவ்,பி. செய்தி வெளியிட்டுள்ளது.
யூத அரசுடன் இரகசிய உறவுகளை வளர்த்துக்கொண்டாலும், பலஸ்தீன வீவகாரத்துக்கு தீர்வு காணப்படாதவிடத்து தனது தோழமை நாடுகளான பாஹ்ரெய்னையும் ஐக்கிய அரபு இராச்சியத்தையும் பின்பற்றி இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தப்போவதில்லை என சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
அரபு பலவானாகவும் இஸ்லாத்தின் மையப் பகுதியாகவும் சவூதி அரேபியாவைக் கொண்டிருப்பது, இஸ்ரேலுக்கு கடைசி இராஜதந்திர பரிசாக அமையக்கூடும். ஆனால், பலஸ்தீன விவகாரத்தில் அனுதாபம் கொண்டுள்ள தனது பிரஜைகள் முழு அரவணைப்புக்கு தயாராகாது என்பதால் சவூதி அரேபியா எச்சரிக்கையாக செயற்பட்டுவருகின்றது.
எவ்வாறாயினும், யூதர்கள் தொடர்பாக நிலவும் பொதுவான கருத்துக்களை மாற்றுவதற்காக அந்த சமூகத்தை நாடும் வகையில் சவூதி அரேபியா துணிகரமாக செயற்படுகின்றது. ஆனால் அந்த சமூகத்தை மதகுரு ஸ்தாபனமும் ஊடகங்களும் இழிவுபடுத்திவந்துள்ளன.
யூதர்களையும் முஸ்லிம்கள் அல்லாத ஏனையவர்களையும் பாடப்புத்தகங்களில் பன்றிகள் மற்றும் குரங்குகள் என இழிவுபடுத்தும்வகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கல்வியில் நிலவும் இத்தகைய தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் செய்துவரும் பிரசாரத்துக்கு அமைய பாடப்புத்தகங்களில் திருத்தங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.
அத்துடன், ‘யூதர்களும் கிறிஸ்தவர்களும் பள்ளிவாசல்களில் இழிவுபடுத்தப்படுவதைத் தடுப்பதற்கு சவூதி அரசாங்கம் தீர்மானித்துள்ளது’ என சவூதி ஆய்வாளர் நஜா அல்-ஒட்டய்பா தெரிவித்தார்.
‘உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு உரையாற்றப் பயன்படுத்தப்படும் பள்ளிவாசல்களில் உள்ள இமாம்களின் வெள்ளிக்கிழமை தொழுகைகளின்போது யூத எதிர்ப்பு வசைபாடல்கள் பொதுவானதாகும்.
எவ்வாறாயினும், முற்றிலும் எதிர்பாராத திருப்புமுனையாக, புனித நகரான மக்காவில் போதகர் ஒருவர், மதங்களிடையே சகிப்புத்தன்மையை பேணும் வகையில் யூதர்களுடன் நபிகள் நாயகம் நெருங்கிய நட்புறவை வைத்திருந்ததார் எனக் இந்த மாதம் குறிப்பிட்டது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையைத் தூண்டிவிட்டது.
மக்காவிலுள்ள பெரிய பள்ளிவாசலின் இமாம் அப்துல்ரஹ்மான் அல்-சுதாயிஸ் என்பவரால் இந்த பிரசங்கம் வழங்கப்பட்டது எனவும் ஏ,எவ்,பி குறிப்பிட்டுள்ள்ளது.