போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1,200 சாரதிகள் கைது

கொழும்பு நகரில் போக்குவரத்துச் சட்ட விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட 1,200 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் தலைமையகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பஸ் முன்னுரிமைத் திட்டம் அமுல்படுத்தப்பட சந்தர்ப்பத்தில் போக்குவரத்து சட்ட விதிமுறைகளை மீறிப் பயணித்த குற்றச்சாட்டில் குறித்த சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் செயற்படுத்தப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையூடாக இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் இந்திக அப்புகொட மேற்படி தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir