நல்லடக்கம் செய்யப்பட்ட ‘ரொஹா’வின் பூதவுடல்

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பாதாள உலகக்குழு உறுப்பினரான கொனா கோவிலே ரொஹா´வின் இறுதிக் கிரியைகள் இன்று 26 இடம்பெற்றன.

பல குற்றச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த ரொஹா நீர்க்கொழும்பு கொச்சிக்கடை போருதொட கம்மல் மோய வீதி கடற்கரையில் இருந்து இந்தியா செல்ல முற்பட்ட போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கடந்த 24 ஆம் திகதி உயிரிழந்தார்.

உயிரிழந்த ரோஹாவின் பூதவுடல் அங்குலான பொதுஜன மாவத்தையில் அமைந்துள்ள அவரின் வீட்டில் நேன்று மதியம் வரையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து பூதவுடல் அவரின் இறுதிக் கிரியைகள் அங்குலான கத்தோலிக்க பொது மயானத்தில் இடம்பெற்றது.

You May Also Like

About the Author: kalaikkathir