4 கோடிகும் அதிக பெறுமதியான தங்கக்கட்டிகளுடன் ஒருவர் கைது!

புத்தளம் கடற்கரைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது தங்கக்கட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கைப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸாருடன் இனைந்து நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது தங்க கட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தங்கக்கட்டிகள் 4 கிலோகிராமிற்கு அதிக எடையுடைதாக காணப்படுவதுடன் 4 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கக்கட்டிகள் சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்காக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் நாகவில்லு பகுதியைச் சேர்ந்தவரெனவும் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir