இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

கொழும்பு-புத்தளம் பிரதான வீதியின் மாரவில-கல்பெம்ம சந்தியில் முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சாரதி கவனயீனமாக முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றதன் காரணமாக விபத்தின் போது குறித்த பெண் வெளியே வீசியெறியப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த 37 வயதுடைய மற்றுமொரு பெண் மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இரத்தினபுரி-எம்பிலிபிடிய பிரதான வீதியில் பிபிலேகம-குறுக்கு வீதியின் ஊடாக செல்லும் சந்தியில் பாரவூர்தியொன்று துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் திபொல்கெடிய பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir