ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் மலிக் சமரவிக்ரம

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஊழல் தடுப்பு குழுவின் உறுப்பினர்களாக கடமையாற்றிய அனைவருக்கு குறித்த ஆணைக்குழு விடுத்திருந்த வேண்டுகோளைத் தொடர்ந்தே அவர் இன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவும் அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆஜராகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir