திருகோணமலையில் சிறு வணிக தயாரிப்புக்கான கண்காட்சி

நாங்கள் ஒன்றாக ஒரே பாதையில் எனும் தொணிப்பொருளின் கீழ் சிறு வணிக தயாரிப்புக்கான கண்காட்சி திருகோணமலையில் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த கண்காட்சியானது திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் சிறிய மத்தியதர முயற்சியாளர்களின் பொருளாதாரத்துடன் கூடிய சமூக ஒருங்கிணைவினை உயர்த்தும் நோக்கத்தின் அடிப்படையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அங்குள்ள, பனை பொருள் உற்பத்தி மற்றும் கைவினைப்பொருட்களுக்கு வெளி மாவட்டங்களில் உள்ள வரவேற்பின் அடிப்படையில் அதன் சந்தை வாய்ப்பை அதிகரிப்பதற்காக இந்த கண்காட்சி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir