கடலில் நீராட சென்ற 3 இளைஞர்கள் உயிரிழப்பு

நீர்கொழும்பு– கம்மல்தொட்ட முகத்துவாரம் கடற்பகுதியில் நீராட சென்று காணாமல் போன 3 இளைஞர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மஸ்கெலியா பகுதியை சேர்ந்த மூவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று (03), கம்மல்தொட்ட முகத்துவாரம் கடற்பகுதிக்கு, 7 இளைஞர்கள் நீராடச் சென்ற நிலையில், அவர்களில் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியிலுள்ள நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த நிலையில் இந்த அனர்ந்தம் நேர்ந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே காணாமல் போனவர்களை தேடும்பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir