இன்று இதுவரை 466 பேருக்கு கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,979 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரையான காலப்பகுதியில் 466 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 07 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 266 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தொற்று உறுதியானவர்களில் 707 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 56 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir