லண்டன் ப்ரெண்ட்ஃபோர்டில், தமிழ் குடும்பம் ஒன்றில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த குடும்பத்தின் கணவர், தன் மனைவி மற்றும் பிள்ளையையும் வீட்டில் வைத்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் பெண்ணின் கணவர் மன நிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில், மேலும் ஒரு துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இரட்டை கொலை செய்த குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
இன்று காலை பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் , அவர்கள் அங்கே சென்றவேளை மூவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.
இதேவேளை உயிரிழந்தவர்கள் மலேசிய தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவத்தில் மூன்று வயது சிறுவனும் 30 வயது மதிக்கத்தக்க தாயாருமே கொல்லப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
லண்டனில் இடம் பெற்ற கொலை தொடர்பில் மேலதிக தகவல்
இறந்த கணவன் – மனைவி இருவருக்கும் இடையே கடந்த சில வாரங்களாக பலத்த வாக்குவாதம் ஏற்பட்டு இருந்ததாக அயவலர்கள் கூறியுள்ளனர்.
மலேசிய கோலாலம்பூரைச் சேர்ந்த இத் தம்பதிகள் திருமணத்தின் பின்னர், பிரித்தானியாவில் குடியேறி இருந்தார்கள், இவர்களுக்கு 3 வயது மகன் ஒருவரும் உள்ளார் என கூறப்படுகிறது.
இவர்களுக்கு இடையே அடிக்கடி பெரும் வாக்கு வாதம் இடம்பெறும் என்றும், அது மணித்தியால கணக்கில் நீடிக்கும் என்றும், கணவர் ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார் என்று என்று அயலவர்கள் கூறியுள்ளார்கள்.
இன்று அதிகாலை 1 மணி அளவில் மீண்டும் பெரிய சண்டை மூண்டுள்ளது, ஆனால் இம் முறை அது பெரும் கூச்சலுக்கு பின்னர் திடீரென அமைதியாகிவிட்டது, இதனால் சந்தேகமடைந்த நான் பொலிசாருக்கு அழைப்பை விடுத்தேன், என்று மேலும் அயலவர் கூறியுள்ளார்.
கதவை உடைத்து உள்ளே சென்ற பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அங்கே கணவன் குற்றுயிராக இருந்தார், சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.
தமிழர்களான, குகா (40) மற்றும் பூர்ணா காமேஷா சிதம்பரநாதன்(30) ஆகியோரும், அவர்களது 3 வயது மகனினதும் சடலங்கள் மீட்கப்பட்டன.
மேலும் மனைவி 3வயது மகன் மற்றும் அவர்களது நாய் குட்டி கூட கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளது.
இந்த இறப்புகள் குறித்து கருத்து வெளியிட்ட ஷெரி திபா என்று குடியிருப்பாளர் ஏழு ஆண்டுகளாக இந்த தொடர்மாடிக் குடியிருப்பில் வசித்து வருவதாகவும் அது ஒரு நல்ல பகுதி என்றும் கூறினார்.
இந்த கட்டிடத்தில் இவர்கள் இறந்துவிட்டதனை தன்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இது மிகவும் அமைதியான பகுதி, மிகவும் அருமையான குடியிருப்பு, தனக்கு எந்தப் பிரச்சினையும் இதுவரை ஏற்பட்டது இல்லை இது குறித்து தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
என பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள், கணவே இவர்கள் அனைவரையும் கொலை செய்துவிட்டு, தன்னையும் தாக்கி இறந்துள்ளதாக நம்பப் படுகிறது என பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.