வன பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகள், பூங்காக்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சகல பூங்காக்களையும் பார்வையிட அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தேசிய வனங்கள் மற்றும் பூங்காக்களில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூட இடமளிப்பதானது, சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளுக்கு முரணான அமையும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir