கொழும்பு, இராஜகிரியவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இராஜகிரிய, பண்டாரநாயக்கபுர பகுதியிலேயே குறித்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இதையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த – குறித்த தொற்றாளருடன் தொடர்புபட்ட 30 பேர் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்காகக் கண்டல்காடு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள 30 பேரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.