பல்கலைக்கழக மாணவரின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!

மாத்தறை- வெல்லமடம பிரதேசத்தில் அமைந்துள்ள ருஹூணு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரின் தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவனும் அவருடன் தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த பிறிதொரு மாணவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளைய தினம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir