இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடு மீள ஆரம்பம்

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிவதற்காக சென்ற இலங்கை பிரஜைகளை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அடுத்த மாதம் முதல் குறித்த செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள கண்காணிப்பு முகாம்களில் காணப்படும் இட வசதிகளை கருத்திற் கொண்டு, அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சுமார் 45 ஆயிரம் பேர் நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir