பள்ளத்தாக்கில் வீழ்ந்த முச்சக்கர வண்டி குழந்தை பலி; இருவர் காயம் !

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லவாய – பேரகல வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 500 மீற்றர் பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது

குறித்த விபத்து சம்பவம் இன்று (15) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது ..

அதேசமயம் குறித்த விபத்தில் மூவர் பலத்த காயமடைந்து ஹல்தும்மல வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

ஒன்றரை வயது குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

ஏனைய அனைவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக தியதலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

You May Also Like

About the Author: kalaikkathir