இன்றிலிருந்து வழமைக்குத் திரும்பியுள்ள புங்குடுதீவு பிரதேசம்

புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்ற அடிப்படையில் குறித்த புங்குடுதீவு பகுதியானது இன்று காலையிலிருந்து தற்காலிக முடக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றிலிருந்து புங்குடுதீவு பிரதேசம் வழமைக்குத் திரும்பும் எனவும் எனினும் அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் எனவும் குறித்த பகுதியானது சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir