ஊரடங்கு சட்டத்தை மீறிய 513 பேர் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 513 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலயங்களுக்குள் மாத்திரம் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினமே ஒரு நாளில் அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் 63 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir