வவுனியாவில் மூன்று வியாபார நிலையங்கள் மூடல்

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட வெளி மாவட்டதை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அவர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படும் வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள சிட்டி ஹாட்வெயார், பழைய பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள கஜன் புக் சென்ரர் மற்றும் விநாயகர் மரக்காலை என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணிய ஏனைய ஊழியர்களிற்கு இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அவர்களுடன் நெருங்கிப்பழகியவர்கள் தொடர்பான தகவல்களும் சுகாதார பிரிவினரால் சேகரிக்கப்பட்டு வருகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir