20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு தொடர்பில் வெளியான தகவல்

20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று( 22) இரவு இடம்பெறவுள்ளது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான இன்றைய இரண்டாம் நாள் விவாதத்தைத் தொடர்ந்து குறித்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இன்று முற்பகல் 10 மணி முதல் இரவு 7.30 வரை நாடாளுமன்ற விவாதம் நடைபெறவுள்ள நிலையில், மதிய போசனத்துக்காக விவாதம் இடைநிறுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று 22ஆம் திகதி இரவு 7.30 இற்கு விவாதம் முடிவடைந்ததும் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பும், குழு நிலை விவாதமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir