முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்

முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே. பாலச்சந்திரன் இன்று (22) மாரடைப்பால் காலமானார்.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் இவரின் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1994 முதல் 2000 ஆம் ஆண்டு வரை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் சார்பாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே. பாலச்சந்திரன் கண்டியை பிறப்பிடமாக கொண்டவராவார்.

வவுனியாவில் வசித்து வந்த இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் வவுனியாவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

1951 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 69 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir